தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கன்னடர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது:
கன்னடர்கள் தங்கள் தாய் மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது.
தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர் கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய் மொழியை உயிரைவிட உயர் வாக நினைக்கிறார்கள். அவர் களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப் படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர் களிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் தமிழில்தான் பதில் சொல்வார்கள். இதை தமிழ் நாட்டில் மட்டுமல்ல பெங்களூ ரிலும் பார்க்கலாம்.
என்னிடம் வரும் கோப்புகளில் கன்னடத்திலேயே கையெழுத் திடுகிறேன்.
சில அதிகாரிகளிடம் இருந்து முழுவதும் ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை மீண்டும் அவர்க ளுக்கே திருப்பி அனுப்பிவிடுகி றேன். என்றார்.