ராஞ்சி
சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணிக் கொண்டிருந்த பலர் இன்று ஜாமீன் கேட்டு நீதிமன்றத்துக்கு அழைந்து கொண்டு இருக்கிறார்கள் என பிரதமர் மோடி பேசினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஜார்கண்ட் மாநில தலைமைச் செயலக புதிக கட்டடம் மற்றும் சட்டப்பேரவைக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
பி்ன்னர், சாஹிப்கஞ்ச் நகரில் கங்கை ஆற்றில் சரக்குகள் எடுத்துச் செல்லும் முனையத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
காஷ்மீரின் நலனுக்காக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தான் நாட்டிற்கான பெரும் திட்டங்கள் தொடங்கி வைக்கப்ப்டடுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம் இங்கிருந்து தொடங்கப்பட்டது.
அதுபோலவே தற்போது விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டத்தையும் தொடங்குகிறோம். ஊழலை ஒழிக்கவும், தீவிரவாதத்தை அழிக்கவும், வளர்ச்சியை நோக்கி நகரவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணிக் கொண்டிருந்த பலர் இன்று ஜாமீன் கேட்டு நீதிமன்றத்துக்கு அழைந்து கொண்டு இருக்கிறார்கள்.ஊழல் செய்தவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.