இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட விவரங்களை இணையதளத்தில் வெளியிட தடை: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

இரா.வினோத்

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தி யில் நாட்டில் முதல்முறையாக கர்நாடகத்தில் கடந்த இரு மாதங் களுக்கு முன்பு சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்போது சாதி, மதம், வருமானம், கல்வித் தகுதி, வயது உட்பட 21 முக்கிய கேள்வி கள் எழுப்பப்பட்டன. இதில் கிடைத்த தகவல்கள் கர்நாடக அரசின் இணையதளத்தில் வெளி யிடப்பட்டன.

இதற்கு தலித் அமைப் பினரும் சமூக செயற்பாட்டாளர் களும் மகளிர் அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன‌.

இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து சிவராஜ், ஜான் ஆப்ரஹாம் உட்பட நால்வர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜி, நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜி, “மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக நடத்தப் பட்ட கணக்கெடுப்பில் சாதி, மதம், வருமானம், பெண்களின் வயது உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது தவறு. எனவே சாதிவாரி கணக்கெடுப்பில் சேகரிக்க‌ப்பட்ட விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது''என்றார்.

SCROLL FOR NEXT