பெங்களூரு
கோல்ட்மேன் சாக்ஸ் பெங்களூரில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதி நிறுவனம் ஆகும். அஷ்வனி ஜுன்ஜுன்வாலா அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து வந்தார்.
இவர் ஆன்லைன் சூதாட்டங் களில் ஈடுபட்டு வந்துள்ளார். கிட்டத் தட்ட ரூ.50 லட்சம் அளவில் அந்தச் சூதாட்டங்களில் இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடன்களை அடைக்க நிறுவனத்தில் இருந்து ரூ.38 கோடியை திருடியுள்ளார். செப்டம்பர் 4-ம் தேதி நடந்த இந்த மோசடி, 6-ம் தேதி நிறுவனத்தில் நடைபெற்ற தணிக்கையின்போது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அந்நிறு வனத்தின் தலைவர் அபிஷேக் பர்ஷீரா, காவல் துறையிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப் படையில் காவல் துறையினர் அஷ்வனி ஜுன்ஜுன்வாலாவை கைது செய்தனர்.
அஷ்வனி ஜுன்ஜுன்வாலா, அந் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த மூவரின் கணினிகளின் வழியே இந்த பரிவர்த்தனையை மேற் கொண்டுள்ளார். அவர்கள் வெளியே சென்ற வேளையில் அவர்களது கணினியைப் பயன் படுத்தி நிறுவனத்துக்கு சொந்த மான ரூ.38 கோடியை சீனாவைச் சேர்ந்த வங்கிக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். இவருக்கு உடந் தையாக இருந்ததாக வேதாந்த் என்பவர் மீதும் புகார் அளிக்கப் பட்டு இருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் அவரை ஏற் கெனவே பதவி நீக்கம் செய்துள்ளது.