இந்தியா

எல்லையில் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் காயம்

பிடிஐ

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இது குறித்து எல்லை பாதுகாப்புப் படை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திய எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. காயமடைந்த வீரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்" என்றார்.

SCROLL FOR NEXT