இந்தியா

ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்கவிருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக்காவல்: மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்

செய்திப்பிரிவு

என். மகேஷ்குமார்

அமராவதி 

ஆந்திராவில் ‘சலோ ஆத்மகூர்’ போராட்டத்தில் பங்கேற்கவிருந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் உள்ளிட்டோர் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு எதிராக மாநிலம் முழுவதிலும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங் கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவி யேற்று 100 நாட்களை கடந்துள் ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக ஆளும் கட்சியின ருக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

ஆளும் கட்சியினரின் வன்முறை யால் பாதிக்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியினர் பலர் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் முறையிட்ட னர். குறிப்பாக தலித்துகள், பழங் குடியின மக்கள் அதிகமானோர் எதிர்க்கட்சித் தலைவரான சந்திர பாபு நாயுடுவிடம் முறையிட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சுமார் 265 குடும்பத்தினர், குண்டூர் மாவட் டம், ஆத்மகூர் அருகே பால்நாடு என்ற கிராமத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர். இவர் களுக்கு தெலுங்கு தேசம் கட்சி யினர் உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து வருகின்றனர். கடந்த 9 நாட்களாக இந்த முகாம் தெலுங்கு தேசம் கட்சியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அந்த முகாமுக்குச் சென்று, ஆளும் கட்சியினரால் பாதிக்கப்பட்டவர் களை சந்திக்க முடிவு செய்தார்.

‘சலோ ஆத்மகூர்’ என்ற பெய ரில் இந்தப் பயணத்தை அவர் நேற்று நடத்த திட்டமிட்டிருந்தார்.சந்திரபாபு நாயுடுவின் இந்தப் பயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச் சினை ஏற்படும் என ஜெகன் மோகன் அரசு கருதியது. இதனால் அவரது பயணத்துக்கு அனுமதி மறுத்தது.

எனினும், ஆந்திரா முழுவதி லும் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ‘சலோ ஆத்மகூர்’ பய ணத்தில் பங்கேற்க முடிவு செய் தனர். தொண்டர்களும் வாகனங் களில் ஆத்மகூரை நோக்கிப் புறப்பட்டனர். இதனால் மாநிலம் முழுவதிலும் நேற்று காலை பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து, அமராவதி தலைநகரப் பகுதியில் உண்டவல்லியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் வீட்டு முன் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், சந்திர பாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ், முன்னாள் அமைச்சர் கள், எம்.பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரை வீட்டுக் காவலில் வைத்தனர். ஆத்மகூர் செல்லும் வழியிலும் பலர் கைது செய்யப்பட்டனர்.

சந்திரபாபு நாயுடுவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதால், மாநிலம் முழுவதிலும் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் கட்சி மற்றும் முதல்வர் ஜெகனுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

உண்ணாவிரதப் போராட்டம்

இதனிடையே, வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு 12 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கினார். அப்போது அவர் காணொலிக் காட்சி மூலம் கட்சி நிர் வாகிகளிடம் பேசும்போது, “ஜன நாயகத்தில் இன்று ஒரு கறுப்பு நாள். எதிர்த்து கேள்வி கேட்பவர்களின் குரல்வளையை அரசு நெரிக்கிறது.

முகாம்களில் இருப்பவர் களுக்கு கொண்டு செல்லப்படும் உணவைகூட அனுமதிக்க மறுக் கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த முயன்ற தெலுங்கு தேசம் கட்சியினரை வீட் டுக் காவலில் வைக்கிறது. இது ஜன நாயகம்தானா? இந்த நாட்டில் வாழ எங்களுக்கு உரிமை இல்லையா?” என்று ஆவேசமாக பேசினார்.

இந்நிலையில், வீட்டிலேயே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடுவை காண அவரது வீட்டு முன் கட்சி நிர்வாகி களும் தொண்டர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்களை போலீஸார் அவரது வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்காவலை கண் டித்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதிலும் பதற்றம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT