மும்பை
இந்தி திரைப்பட நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்தர். காங்கிரஸ் வேட்பாளராக மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். எனினும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி வெற்றி பெற்றார்.
அதன்பிறகு அவர் கட்சி பணிகளி்ல பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். இந்தநிலையில் அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் மும்பை தலைவர் மிலிந்த் தியோராவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
‘‘எனது அரசியல் மற்றும் சமூக நோக்கங்களை நான் செயல்படுத்த கட்சியில் உள்ள சுயநல சக்திகள் அனுமதிப்பதில்லை. மும்பை காங்கிரஸ் மிக உன்னதமான லட்சியத்துக்காக பணியாற்றுவதை விட்டுவிட்டு, மோசமான உள் அரசியலை எதிர்த்து போராடும் நிலைக்கே நான் தள்ளப்படுகிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.