புதுடெல்லி
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி கடந்த ஏப்ரலில் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார்.
இந்நிலையில் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக ஷர்மிஸ்தா முகர்ஜி, அன்சுல் மீரா குமார் நேற்று நியமிக்கப்பட்டனர். இதில் ஷர்மிஸ்தா முகர்ஜி, குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஆவார். அன்சுல் மீரா குமார், மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரின் மகன் ஆவார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இருவரும் ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளனர்.