ஸ்ரீநகர்
மொகரம் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீரின் பெரும்பாலான பகுதி களில் தடை உத்தரவுகளும், கட்டுப்பாடுகளும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ம் தேதி நீக்கியது. மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களா கவும் பிரித்தது.
மத்திய அரசின் இந்த நட வடிக்கைக்கு காஷ்மீரில் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக அங்கு 144 தடை உத்தரவையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு விதித் தது. மேலும், அங்கு கூடுதல் எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, வதந்தி பரவு வதை தடுப்பதற்காக அங்கு தொலைபேசி, செல்போன், இணையதள சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதன் காரணமாக, காஷ்மீரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து அமைதியான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, அங்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகளையும், கட்டுப்பாடு களையும் மத்திய அரசு படிப் படியாக விலக்கி வந்தது. ஒருகட்டத் தில், காஷ்மீர் முழுவதும் கட்டுப் பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட் டன. தொலைபேசி சேவையும் வழங்கப்பட்டது. இதனால், அண்மைக்காலமாக அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தது.
இந்நிலையில், மொகரம் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீர் முழுவதும் நேற்று மீண்டும் புதிதாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து நெடுஞ்சாலைகளிலும் தீவிர வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து தடை செய்யப் பட்டிருக்கும் சாலைகளில் ஆம் புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. முஹரம் பண்டிகையை ஒட்டி, ஊர்வலங்கள், வழிபாடுகளுக் காக மக்கள் ஒன்றுகூடும் போது கலவரங்கள் ஏற்பட வாய்ப் பிருப்பதால் மீண்டும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாக். ராணுவம் அத்துமீறல்
காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பீரங்கிகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.