புதுடெல்லி
சந்திரயான் 2 விண்கலம் நிலவை தொட்டுவிடும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் லேண்டர் கருவிக்கும், தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இஸ்ரோ தலைவர் கே.சிவ னுக்கு தடைகளும், கஷ்டங்களும் ஒன்றும் புதிதல்ல.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக இருக்கும் கே.சிவன், ஆங்கிலம் புழங்கும் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்றவர் அல்ல. செல்வம் கொழிக்கும் குடும்பத்தில் அவர் பிறக்கவில்லை.
ஒரு சாதாரண விவசாயியின் மகனாக பிறந்துதான் இன்று விண்ணை தொட்டிருக்கிறார் இந்த அதிசய மனிதர்.
இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய சரக்கல்விளை கிராமத்தில் ஏழைக் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்த கைலாசவடிவு சிவன்.
தனது ஊரில் உள்ள அரசாங்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற அவர், நாகர்கோவிலின் எஸ்.டி.இந்துக் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் பட்டப்பிடிப்பில் சேர்ந்தார்.
கல்வியில் சிறந்து விளங்கிய சிவன், கல்லூரியில் படிக்கும் போது, அதிகாலை 4 மணிக்கெல் லாம் தனது தந்தையின் விவசாயத் தொழிலுக்கு உதவியாக சென்று விடுவார். பின்னர், வேலை முடிந்து அங்கேயே குளித்துவிட்டு அவசர அவசரமாக கல்லூரிக்கு செல்வார். காலை உணவு எல்லாம் மிக அபூர் வமானதாகவே இருந்திருக்கிறது அவரது வாழ்வில்.
அவரது நண்பர்கள் அனைவரும் உயர் ரக ஷுக்கள், ஆடைகள் அணிந்திருக்க, சாதாரண காலணி கூட இல்லாமல் சட்டை, வேட்டி யுடன் மட்டும் கல்லூரிக்கு சென்றிருக்கிறார் சிவன். இதனால், சக மாணவர்களின் கேலிப் பேச்சுகளுக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறார்.
இருந்தபோதிலும், அவற்றை யெல்லாம் மீறி, படிப்பில் மட்டும் தீவிர கவனம் செலுத்திய சிவன், நூறு சதவீத தேர்ச்சியுடன் பட்டப் படிப்பை முடித்தார். வறுமை நிறைந்திருந்த அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியே இவர்தான்.
இதையடுத்து, அவரது பேரா சிரியர்கள் வழிகாட்டுதலின்பேரில், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்.ஐ.டி.) சேர்ந்த சிவன், 1980-இல் அங்கு ஏரோ நாட்டிக்கல் பொறியியல் படிப்பை முடித்தார். அங்கு படிக்கும் போதுதான் முதன்முதலில் பேண்ட் அணிந்ததாக கூறுகிறார் சிவன்.
இதன் தொடர்ச்சியாக, ஐஐஎஸ்சி கல்வி நிறுவனத்தில் பொறியியல் மேற்படிப்பை நிறைவு செய்த அவர், 1982-இல் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார். கிட்டத்தட்ட இஸ்ரோவில் தயாரிக்கப்பட்ட அனைத்து ரக ராக்கெட் தயாரிப்புப் பணிகளிலும் சிவன் தனது பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறார். கிரையோஜனிக் என்ஜின் உருவாக் கம், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக் கெட்கள் கட்டுமானம் ஆகியவற் றில் மிக முக்கிய பங்காற்றியிருக் கிறார் சிவன்.
இதனால், 'இஸ்ரோ வின் ராக்கெட் மனிதர்' என விஞ் ஞானிகளால் அழைக்கப்பட்டார்.
கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காரணமாக இன்று இஸ்ரோ மையத்தின் தலைவரா கவே சிவன் உயர்ந்திருக்கிறார்.
சிவனின் அசாதாரண வாழ்க் கைப் பயணத்தை பார்க்கும்போது, சந்திரயான் 2 திட்டத்தில் ஏற் பட்ட தோல்வியெல்லாம், அவ ருக்கு நேரிட்ட மிகச் சிறிய சறுக் கலாகவே தோன்றுகிறது.