இந்தியா

மோடியின் தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்: உத்தவ் தாக்கரே 

செய்திப்பிரிவு

அயோத்தியில் ராமர் கோயில் மோடியின் தலைமையின் கீழ் கட்டப்படும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, “பாஜக - சிவசேனா தலைமையிலான கூட்டணி வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அயோத்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் நிச்சயம் ராமர் கோயில் கட்டப்படும் என்று உறுதி கூறுகிறேன்.

மோடி இங்கு வரும்போது நான் எத்தனை முறை நன்றி சொல்வேன் என்று கேட்பேன்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது என பல நடவடிக்கைகள் மோடி அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல் அயோத்தியில் நிச்சயம் ராமர் கோயில் கட்டப்படும்” என்றார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பல முறை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றனர். மேலும் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் பங்கீடு குறித்து இரு கட்சித் தலைவர்களும் ஆலோசித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT