இந்தியா

காஷ்மீர் மக்களை வரவேற்கும் விதத்தில் டெல்லி ஓட்டலில் ‘ஆர்ட்டிக்கிள் 370 தாளி’ உணவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

காஷ்மீர் மக்களை வரவேற்கும் விதத்தில் டெல்லி ஓட்டலில் வித்தியாசமாக ‘ஆர்ட்டிக்கிள் 370 தாளி’ அறிமுகம் செய்துள்ளனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை (ஆர்ட்டிக்கிள் 370), மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. இதன்மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்பது அதிகாரபூர்வ மாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடக்கிறது. காஷ்மீரில் அமைதியை கொண்டுவர, பல் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில், காஷ்மீரில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் உள்ள ‘ஆர்டோர் 2.1’ என்ற பிரபல ஓட்டல், ‘ஆர்ட்டிக்கிள் 370 தாளி’ (ஒருங்கிணைந்த இந்தியா 370 தாளி) என்ற வித்தியாசமான பெயரில் காஷ்மீர் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ‘ஆர்ட்டிக்கிள் 370 தாளி’ ரூ.2,370 (சைவம்), ரூ.2,669 (அசைவம்) என்று 2 வகைகளில் வழங்கப்படுகிறது. காஷ்மீரைச் சேர்ந்தவராக இருந்தால், அரசு அடையாள அட்டை ஒன்றை காட்டி னால் இந்த விலையில் ரூ.370 குறைக்கப்படும்.

சைவ தாளியில் காஷ்மீர் புலாவ், கமீர் கி ரொட்டி உட்பட பல உணவு வகைகள் வழங்கப்படும். அசைவமாக இருந்தால் மேற் கூறிய சைவ உணவுகளுடன் காஷ்மீர் ஆட்டுக்கறியும் சேர்த்து வழங்கப்படும்.

இதுகுறித்து ‘ஆர்டோர் 2.1’ ஓட்டல் உரிமையாளர் சுவ்வெட் கல்ரா கூறியதாவது:

நாம் மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம். அமைதி மற்றும் நல் லிணக்கத்துடன் வாழ வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த நாடு ஒருங்கிணைந்து செயல்படு வதற்கும், மிகப்பெரிய குடும்பமாக இருப்பதற்கும், எங்கள் ஓட்டலின் பங்களிப்புதான் ‘ஆர்ட்டிக்கிள் 370 தாளி’.

மத்திய அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஒவ் வொரு ‘ஆர்ட்டிக்கிள் 370 தாளி’க்கும் நாங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் 170 ரூபாயை காஷ்மீர் நிவாரண நிதிக்கு வழங்குவோம். மதச்சார்பற்ற தன்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த உணவை அறிமுகம் செய்துள்ளோம்.

இவ்வாறு ஓட்டல் உரிமையாளர் சுவ்வெட் கல்ரா கூறினார்.

SCROLL FOR NEXT