மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த கலாம் தான் நிலைகுலைந்து சரியும் சில மணித் துளிகளுக்கு தனக்கு நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்கிய காவலரை அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து கிழக்கு காசி மலைப்பிரதேச எஸ்.பி. காக்ரங் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், அவருக்கு நாள் முழுவதும் பாதுகாப்பு அளித்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். அப்துல் கலாம் அழைக்கிறார் என்றதும் முதலில் அந்த காவலர்
அச்சம் கொண்டார். பின்னர், பாராட்டு கிடைத்தபோது அந்த காவலர் நெகிழ்ச்சியடைந்தார். கலாமின் சிறப்பே அவரது சிறிய விஷயங்களைக்கூட மனமார பாராட்டுவதே" என்றார்.