இந்தியா

நாடு முழுவதும் உள்ள சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

நாடு முழுவதும் உள்ள சிறு வியாபாரிகளுக்கு மாத ஓய்வூதி யம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.7) தொடங்கி வைக்கிறார்.

சிறு வியாபாரிகளுக்கு விரை வில் மாத ஓய்வூதியம் வழங்கப் படும் என மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. ‘பிரதம மந்திரியின் லகு வியாபாரி மான் தன் யோஜனா' எனப் பெயரிடப் பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், சிறிய கடைகளை நடத்துபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், சில் லறை வியாபாரிகள் ஆகியோ ருக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த திட்டத் தினை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கவுள்ள தாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக் கும் மோடி, மகாராஷ்டிரா மாநிலத் தின் நாக்பூர் நகருக்கு நாளை வருகை தரவுள்ளார்.

அப்பொழுது, இந்த திட்டத் தினை அவர் அதிகாரப்பூர்வ மாக தொடங்கி வைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைவாக வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் (18 முதல் 40 வயதுக்குட்பட்ட) இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர். இந்த திட்டம் செயல்படுத் தப்பட்டால் நாடு முழுவதும் உள்ள சுமார் 3 கோடி சிறு வியாபாரிகள் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு களையும் மோடி அன்றைய தினம் வெளியிடவுள்ளதாக கூறப்படு கிறது.

இதனிடையே, நாக்பூருக்கு வருகை தரும் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். நாக் பூரில் மெட்ரோ ரயில் வழித்தடம், எய்ம்ஸ் மருத்துவமனை, சந்திர பூர் நகரில் ராணுவப் பள்ளி, தேஜாஸ்வினி பேருந்துகள் திட் டம் உள்ளிட்டவற்றை மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு நாக்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ் டிரா அரசு தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT