இந்தியா

ஆசிரியர்களே தேசத்தை கட்டமைக்கிறார்கள்: சோனியா காந்தி புகழாரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

ஆசிரியர் தினத்தை ஒட்டி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஆசிரியர் தின நன்னாளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஆசிரியர்கள்தான் உண்மையில் இந்த தேசத்தைக் கட்டமைக்கிறார்கள். அவர்கள்தான் மாணவர்களுக்கு நேர்மையின் வழியைக் கற்பிக்கின்றனர்.

ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்துவதோடு அவர்களின் குணநலன்களையும் கட்டமைக்கின்றனர். மாணவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கின்றனர். அவர்களின் க்ரியா சக்தியை ஊக்குவிக்கின்றனர்.

வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கின்றனர். ஆசிரியர்களின் கடின உழைப்பிற்கு நாம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர்கள்தான் உண்மையில் தேசத்தைக் கட்டமைக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் தினம் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. யுனஸ்கோ அமைப்பு அக்டோபர் 5-ம் தேதியையே சர்வதேச ஆசிரியர் தினமாகக் அறிவித்திருக்கிறது.

ஆனால் பல நாடுகளும் இந்தியாவைப் போலவே தங்கள் நாட்டில் கல்விக்காக தொண்டாற்றிய தலைவர்களைக் கொண்டாடும் வகையில் ஆசிரியர் தினத்தை அவர்களின் பிறந்தநாளில் கொண்டாடுகிறது.

உதாரணத்துக்கு கோஸ்டாரிக்காவில் நவம்பர் 22, செக் குடியரசில் மார்ச் 28, ஈகுவேடாரில் ஏப்ரல் 13, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதத்தின் கடைசி வெளிக்கிழமை, அமெரிக்காவில் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை, அல்பேனியாவில் மார்ச் 7 என ஆசிரியர் தினம் பல தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT