இந்தியா

எல்லையில் 11-வது முறையாக அத்துமீறியது பாகிஸ்தான்

பிடிஐ

இம்மாத துவக்கம் முதலே, எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவம் 11-வது முறையாக தாக்குதலில் ஈடுபட்டது.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

நேற்றிரவு 10.45 மணியளவில் தொடங்கிய தாக்குதல் 11.30 மணிவரை நீடித்தது. இந்திய தரப்பில் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏதும் ஏற்படவில்லை.

கடந்த 15-ம் தேதி முதல் 7-வது முறையாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இம்மாதத்தில் இது 11-வது தாக்குதல்.

பாகிஸ்தான் தாக்குதலில் எல்லை கிராம பெண் ஒருவர் பலியானார் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நவ்ஷேரா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது" என்றார்.

SCROLL FOR NEXT