ஷாஜகான்பூர்
உத்தரபிரதேச மாநிலம் முமுக்சு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமி சின்மயானந்த். இவர் இங்கு ஆசிரமம், கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சின்மயானந்த் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக, சின்மயானந் தின் ஆசிரம அறக்கட்டளை சார்பில் இயங்கி வந்த சட்டக் கல்லூரியில் பயின்ற மாணவி, சமூக வலைதளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டார். புகாரின் அடிப்படையில் ஷாஜகான்பூர் காவல் துறையினர் கடந்த மாதம் 27-ம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக உச்ச நீதி மன்றம் தாமாகவே முன்வந்து வழக்கைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) மூலம் விசாரணை நடத்த உத்தர விட்டது. இந்த வழக்கு தொடர் பான முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு நேற்று முன்தினம் அமைத்தது.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு சின்மயானந்திடம் விசா ரணை நடத்த போலீஸார் சென்ற போது அவர் தலைமறைவான தாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனக்கு நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது. நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை சிறப்பு விசாரணைக் குழு முன்பு சொல்வேன். பத்திரிகையா ளர்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கப் போவதில்லை” என்றார்.
பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை வேறு சட்டக் கல்லூ ரிக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதி அளித்தார். பாதிக்கப்பட்ட மாணவி, அவரது சகோதரர் இருவருமே சுவாமி சின்மயானந்தின் சட்டக் கல்லூரி களில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ