இந்தியா

கல்லூரிகள், பல்கலை.யில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை

செய்திப்பிரிவு

சென்னை

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து அதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

அனைத்து உயர் கல்வி நிறு வனங்களும் பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக கல்வி வளாகங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளில் இயங்கும் உணவகம் உட்பட எல்லா கடைகளிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரவும் தடை விதிக்க வேண்டும். மேலும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பிரச்சாரங்கள் மூலம் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT