தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தை மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரிடம் கொடுத்து ஆசி பெறுகிறார் தமிழிசை சவுந்தரராஜன். 
இந்தியா

தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக செப்.8-ம் தேதி தமிழிசை பதவியேற்பு

செய்திப்பிரிவு

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத் 

தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 8) பதவியேற்க உள்ளார்.

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக கடந்த 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் வரும் 8-ம் தேதி காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெறும் விழா வில், தெலங்கானா ஆளுநராக பதவியேற்க உள்ளார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ். சவுஹான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

விழாவில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக தமிழிசை வரும் 11-ம் தேதி ஆளுநராக பதவியேற்பார் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே அவர் பதவியேற்க உள்ளார்.

பங்காரு அடிகளாரிடம் ஆசி

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளாரின் மூத்த மகன் கோ.ப.அன்பழகன் இல்லத் திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த தமிழிசை சவுந்தரராஜன் விழாவுக்குப் பின், பங்காரு அடிகளாரைச் சந்தித் தார்.

அப்போது அவர், தான் தெலங் கானா ஆளுநராக நியமிக்கப் பட்டதற்கான கடிதத்தை பங்காரு அடிகளாரிடம் கொடுத்து ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மன் கருவறைக்குச் சென்று அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டார்.

SCROLL FOR NEXT