இந்தியா

வரலாற்றாசிரியர், எழுத்தாளர் ரொமிலா தாப்பர் மற்றும் பிறருக்கு அனுப்பிய கடிதங்களை திரும்பப் பெறுமாறு ஜே.என்.யூ ஆசியர் சங்கம் வலியுறுத்தல் 

செய்திப்பிரிவு

75 வயதான பேராசிரியர்கள் தங்கள் கவுரவ பேராசிரியர் பொறுப்பை தொடர்கின்றனரா அல்லது இல்லையா என்பதைக் கேட்டு அவர்கள் தங்கள் சுயவிவரங்களை சமர்ப்பிக்குமாறு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகம் உத்தரவிட்டது பெரிய சர்ச்சையைக் கிளப்ப தற்போது பல்கலைக் கழகம் கடிதம் அனுப்பப்பட்ட அனைத்து பேராசிரியர்களிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும், கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் பல வரலாற்று நூல்களை எழுதிய, ஜேன்.என்.யு.வில் பெரும் பங்களிப்புகளை மேற்கொண்ட புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பரும் அடங்குவார்,

இந்நிலையில் ஜே.என்.யூ ஆசிரியர்கள் சங்கம் கவுரவ பேராசிரியர்களிடம் சிவி கேட்பது ‘அரசியல் ரீதியான காய் நகர்த்தல்’ என்று பல்கலைக் கழகத்தை விமர்சித்துள்ளது.

பல்கலைக் கழகம் இது வெறும் நடைமுறை மட்டுமே யாரையும் பணியிலிருந்து அனுப்பும் நோக்கமில்லை என்று தெரிவித்தாலும் ஆசிரியர் சங்கம் பல்கலை நிர்வாகத்தின் கடிதத்தில், ‘கவுரவ பேராசிரியரின் கடந்த காலப் பணி மதிப்பீடு, பல்கலைக் கழக கமிட்டி இவர் தொடர்ந்து பணியாற்றுவதை முடிவு செய்யும்’ என்று கூறுவது எதனால்? இது நடைமுறைக்கான வாசகமா? என்று ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆகவே அந்தக் கடிதத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பதோடு அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மனிதவள அமைச்சகம் தெளிவுபடுத்திஅ போது, எந்த ஒரு பேராசிரியரின் பணியையும் தொடராமல் செய்யும் நடைமுறை அல்ல இது, வழக்கமான நடைமுறையே பின்பற்றப்படுகிறது என்று கூறியுள்ளது.

SCROLL FOR NEXT