இந்தியா

உலக சுகாதார மைய கூட்டத்துக்கு சைக்கிளில் சென்ற மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெறும் உலக சுகாதார மையத்தின் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான 72-வது பிராந்திய கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் சைக்கிளில் சென்றார்.

டீஸ் ஜனவரி மார்க் பகுதியில் அமைந்துள்ளது தனது இல்லத்தில் இருந்து பிக்காஜி காமா பகுதியில் உள்ள தனியார் விடுதி வரை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சைக்கிளில் சென்றார்.

அமைச்சருடன் பூட்டான் நாட்டு சுகாதார அமைச்சர் டெச்சன் வாங்மோ, உலக சுகாதார மைய உறுப்பினர் பெர்னார்ட் ஸ்வார்ட்லேண்டர் ஆகியோரும் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

பின்னர் அங்கு உலக சுகாதார மையத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசியபோது, "உலக சுகாதார மையத்தின் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான 72-வது பிராந்திய கூட்டம் பிரதமர் மோடி ஃபிட் இந்தியா இயக்கத்தை அறிவித்த நேரத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

யோகா, விளையாட்டு, சைக்கிளிங் போன்றவற்றில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவே பிரதமர் ஊக்கப்படுத்துகிறார்.

இன்றைய தினம் உலக சுகாதார மையம் ஏற்பாடு செய்துள்ள சைக்கிளிங், யோகா நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டேன்.
இது வெறு அடையாளம் அல்ல இவற்றை நாம் நம் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதற்கான உதாரணம்" என்றார்.

SCROLL FOR NEXT