புதுடெல்லி
ராணுவத்தின் துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவேன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராணுவத்தின் துணைத் தளபதி யாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்புவின் பதவிக் காலம் கடந்த 31-ம் தேதி யுடன் முடிவடைந்தது. முன்னதாக அந்தப் பதவிக்கு லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவேன் நியமிக்கப்பட்டிருந்தார். அன்பு ஓய்வு பெற்றதை அடுத்து, ராணுவ துணைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவர் இந்திய - சீன எல்லையில் சுமார் 4,000 கி.மீ. தூரத்துக்கு பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருக்கும் கிழக்குப் படை பிரிவுக்கு தலைமை வகித்தவர். காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டவர்.
ராணுவத் தளபதியாக தற்போது பிபின் ராவத் பதவி வகிக்கிறார். இவர் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதை யடுத்து ராணுவ தளபதி பதவிக்கு பணி மூப்பு அடிப்படையில், மனோஜ் முகுந்த் நியமிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த 1980-ம் ஆண்டு ராணு வத்தில் சேர்ந்த மனோஜ் முகுந்த் இலங்கைக்கு இந்திய அமைதிப் படை சென்றபோது அதில் பங் கேற்றவர். ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காக, ‘சேனா மெடல்’ உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.