பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் 
இந்தியா

பிஹாரில் அருண் ஜேட்லிக்கு சிலை: நிதிஷ் குமார் உறுதி

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு பிஹாரில் சிலை வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் நிதிஷ் குமார் பேசுகையில், ''மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு பிஹாரில் சிலை நிறுவப்படும் . மேலும், ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினம் பிஹாரில் அரசு நிகழ்வாகக் கொண்டாடப்படும்” என்றார்.

அருண் ஜேட்லி

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் அரங்கின் பெயரை மாற்றி அருண் ஜேட்லி பெயரைச் சூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ துணைத் தலைவராகவும், டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராகவும் அருண் ஜேட்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 24-ம் தேதி மரணம் அடைந்தார்.

SCROLL FOR NEXT