கோப்புப்படம் 
இந்தியா

தேசிய குடிமக்கள் பதிவேடு; விடுபட்ட வங்கதேச அகதிகள்:பாஜக மூத்த தலைவர் புகார்

செய்திப்பிரிவு

திஸ்பூர்
தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியலில் வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகள் பெயர் விடுபட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே சில முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அம்மாநில அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமானந்தா பிஸ்வா சர்மா புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘கடந்த 1971-ம் ஆண்டுக்கு முன்பாக வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகள் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறவில்லை. அவர்கள் வழங்கிய அகதிகள் சான்றிதழ்களை என்ஆர்சி அதிகாரிகள் ஏற்கவில்லை.
அதேசமயம் முறைகேடாக பலர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அசாம் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் 20 சதவீதமும், உள் மாவட்டங்களில் 10 சதவீதமும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறேன். இதனை மத்திய, மாநில அரசுகள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளன. அதன்படி மறு ஆய்வு நடத்தப்பட வேண்டும். குறிப்பாக வங்கதேசத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் முறைகேடாக சேர்க்கப்பட்டவர்களின் பெயர்கள் கண்டறியப்பட வேண்டும்’’ என ஹிமானந்த சர்மா கூறினார்.

SCROLL FOR NEXT