புதுடெல்லி
பழைய மாடல் 15 அங்குல மேக்புக் டேப்கள் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அதைத் தயாரித்த ஆப்பிள் நிறுவனமே தெரிவித்துள்ள நிலையில் விமானப் பயணத்தின்போது அவற்றை எடுத்துவரவேண்டாம் என்று ஏர் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஜூன் 20 அன்று, 'பழைய மாடல் 15 அங்குல மேக்புக் ப்ரோ' கணினிகளில் உள்ள பேட்டரி அதிக வெப்பம் மற்றும் தீப்பற்றும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். 2015 லிருந்து 2017 ஆண்டுகளுக்குள்ளான இடைப்பட்ட காலங்களில் வாங்கப்பட்ட இந்த டாப்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்ற ஒரு அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. இதனை அமெரிக்க பெஃடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, அமெரிக்காவில் உள்ள அனைத்து சிவில் விமானங்களிலும்ட இந்த மாடல் கணினி லேப் டாப்களை எடுத்துச்செல்ல தடை விதித்தது.
தற்போது, இந்திய அரசின் பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்தியாவிலும் இதற்கு தடை விதித்துள்ளது. 2015 பழைய மாடல் ஆப்பிள் டேப்களுக்கு தடை விதித்து ஏர் இந்தியா இணையதள பக்கங்களில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் வெளியாகியுள்ள பதிவில் ஏர் இந்தியா கூறியுள்ளதாவது:
விமானப் போக்குவரத்து தொடர்பாக டி.ஜி.சி.ஏ (பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) ஓர் ஆலோசனை வழங்கியுள்ளது. அதன்படி செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வரை வாங்கப்பட்ட, 15 அங்குல செக்-இன் அல்லது கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஆப்பிள் மேக் புக் ப்ரோ டேப்பை விமானப் பயணத்தின்போது எடுத்துச் செல்ல வேண்டாம் என்று பயணிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.
2015 பழைய மாடல் ஆப்பிள் மேக் புக் ப்ரோ டேப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரிகள் பாதிக்கப்பட்ட லித்தியம் பேட்டரிகள் எனவே அவை அபாயத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் விமானப் பயணத்தில் இந்த வகை பழைய மாடல் கணினிகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது.
இவ்வாறுஏர் இந்தியா ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.