ராய்ப்பூர்
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் பழங்குடியினர் அந்தஸ்து மறுக்கப்பட்டதை தொடர்ந்து, பொய் சாதிச் சான்றிதழ் பெற்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2000 ஆண்டில் சத்தீஸ்கர் உருவானதை தொடர்ந்து 2003 வரை அம்மாநில முதல்வராக பதவி வகித்தவர் அஜித் ஜோகி. கடந்த 2016-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய இவர் ‘ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்’ என்ற கட்சியை நடத்தி வருகிறார். தன்னை பழங்குடியினத்தின் ‘கன் வார்’ சமூகத்தவராக கூறிவரும் ஜோகி, தற்போது பழங்குடி யினருக்கு ஒதுக்கப்பட்ட மார்வாகி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இவரது பழங்குடியினர் அந்தஸ்து குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை மாநில அரசு அமைத்தது. இக்குழு தனது ஆய்வில், அஜித் ஜோகியின் ஜாதி தொடர்பான அவரது வாதத்தை ஏற்க மறுத்து விட்டது. ஜோகியின் சாதிச் சான் றிதழை கடந்த வாரம் ரத்து செய் தது. மேலும் பிலாஸ்பூர் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க பரிந் துரை செய்தது.
இதையடுத்து முறைகேடாக சாதிச் சான்றிதழ் பெற்றதாக சத்தீஸ் கர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி விதிமுறை கள், 10(1)-வது பிரிவின் கீழ் அஜித் ஜோகி மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பிலாஸ்பூர் எஸ்.பி. பிரசாந்த் கூறும்போது, “மாவட்ட நிர்வாகத் தின் உத்தரவின் பேரில் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அஜித் ஜோகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அஜித் ஜோகியின் பழங்குடி யினர் அந்தஸ்து ரத்து செய்யப் படுவது இது முதல்முறையல்ல. 2011-ல் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்போதைய பாஜக அரசு அமைத்த உயர் நிலைக் குழுவும் ஜோகியின் பழங்குயினர் அந்தஸ்தை ரத்து செய்தது. பின்னர் ஜோகியின் மேல்முறையீட்டின் பேரில் புதிய குழு அமைக்கப்பட்டது.
பழங்குடியினர் அந்தஸ்து ரத்து காரணமாக அஜித் ஜோகியின் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து ஏற்பட் டுள்ளது.