டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஜப்பானை சேர்ந்த யோகா ஆசிரியர் கசுவோ கெய்ஷின் கிமுராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி யோகா விருதினை வழங்கினார்.படம்: பிடிஐ 
இந்தியா

‘எனது ஆரோக்கியத்தின் ரகசியம்’

செய்திப்பிரிவு

புதுடெல்லி

டெல்லியில் நேற்று நடந்த விழாவில் யோகாசன விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

தேசத்தந்தை மகாத்மா காந்தி இயற்கையின் வழியில் வாழ்ந்தார். அவரது வாழ்வியல் நடைமுறை களை மக்கள் பின்பற்ற வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய புராணங்கள், வேதங்களில் ஆயுர்வேதம், யோகாவின் முக்கியத் துவம் குறித்து பல்வேறு குறிப்புகள் உள்ளன.

பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சிகிச்சை முறை களும் வேதங்களில் உள்ளன. ஆனால் வேதத்தையும் விஞ்ஞானத் தையும் இணைப்பதில் நாம் மிகப் பெரிய வெற்றி பெறவில்லை.

இந்த குறையைப் போக்க கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தீராத நோய்களை குணப்படுத்த பழங்கால வேதத்தையும் தற் போதைய விஞ்ஞான அறிவையும் ஒன்றிணைக்க வேண்டும்.

அரசியல்வாதிகளின் வாழ்க்கை யில் உடல்ரீதியான பல்வேறு பாதிப்பு கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் யோகா, இயற்கை வாழ்வியல் நடைமுறைகள் மூலம் உடல்நல பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும். யோகா, பிராணாயாமம், ஆயுர்வேதமே எனது ஆரோக் கியத்தின் ரகசியம்.

நாடு முழுவதும் 12,500 ஆயுஷ் மையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன் ஒரு பகுதியாக இன்று ஹரியாணாவில் 10 ஆயுஷ் மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 29-ம் தேதி ஆரோக்கிய இந்தியா இயக்கத்தை தொடங்கி னோம். இந்த இயக்கத்தின் வலுவான தூண்களாக ஆயுர்வேதமும் யோகா வும் உள்ளன. இந்தியர்கள் அனை வரும் நாள்தோறும் யோகாசனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT