பிஹார் மாநில தலைமைச் செயலக ஊழியர்கள் ஜீன்ஸ், டிஷர்ட் போன்ற உடைகளை அணிந்து அலுவலகம் வர அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு முதன்மை செயலர் மஹாதேவ் பிரசாத் பிறப்பித்துள்ள ஆணையில், "தலைமைச் செயலக ஊழியர்களும் அதிகாரிகளும் அலுவலக மரபுக்கு புறம்பான ஆடைகளை அணிந்து வருகின்றனர்.
இது அலுவலக கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் எதிரானது. எனவே, தலைமைச் செயலக ஊழியர்கள், அதிகாரிகள் கட்டாயமாக அலுவலகத்துக்கு உகந்த உடையையே (ஃபார்மல் ட்ரெஸ்) உடுத்திவரவேண்டும்.
அந்த ஆடை நாகரிகமானதாக, சவுகரியமானதாக, எளிமையானதாக, வெளிர் நிறம் கொண்டவையாக இருக்க வேண்டும். தட்பவெப்பத்துக்கு ஏற்றாற்போலவும் உங்களின் பணிக்கு ஏற்றவாறும் உடையைத் தேர்ந்தெடுக்கவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி செய்கிறது.