இந்தியா

கோதாவரி மகா புஷ்கரம் விழாவின் 7-வது நாளில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறையால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

செய்திப்பிரிவு

கோதாவரி மகாபுஷ்கரம் விழாவை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்டதால், லட்சக் கணக்கான பக்தர்கள் கோதாவரி ஆற்றில் நேற்று புனித நீராடினர்.

கோதாவரி மகாபுஷ்கரம் விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. 7-ம் நாளான நேற்று ஆந்திரா, தெலங் கானா ஆகிய இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். நாடு முழுவதிலும் இருந்து ரயில், பஸ், கார், ஜீப் போன்ற பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இவ்விழாவை முன்னிட்டு அரசு, தனியார்பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களுக்கு ஆந்திர அரசு விடு முறை அறிவித்துள்ளது. இதனால் ஏராளமானோர் தங்களது குடும்பத் தினருடன் கோதாவரியில் புனித நீராடி வருகின்றனர். இதனால் கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் மற்றும் தெலங்கானா வில் கம்மம், நிஜாமாபாத், வாரங்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கோதாவரி நதிக்கரைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது ஆளுநரான நரசிம்மன் தம்பதியினர் நேற்று காலை கோதாவரி நதியில் புனித நீராடினர். அதன் பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பத்ராசலம் அருகே உள்ள மோதே பகுதியிலும் புனித நீராடினர்.

முன்னாள் எம்.பியும், நடிகையு மான ஜெயப்பிரதா ராஜமுந்திரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் நேற்று புனித நீராடினார். திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ராஜமுந்திரி பகுதியில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், அப்பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை சங்கத்தினரும் ஆர்ய வைஸ்ய சங்கத்தினரும் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கினர்.

SCROLL FOR NEXT