ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காவலர் தன்பத். இவருக்கும் கிரண் என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் ஆனது. திருமணத்துக்கு முன்னதாக கிரணுடன் சுவாரசியத்துக்காக வும் விளையாட்டாகவும் ப்ரீ வெட் டிங் ஷூட் வீடியோவில் நடித்தார் தன்பத். அதில், தன்பத் போலீஸ் சீருடையில் உள்ளார். ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் வரும் கிரணை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கிறார். அப்போது, தன்பத்தின் சட்டைப் பையில் லஞ்சமாக பணத்தை வைத்து விட்டு கிரண் செல்கிறார்.
கிரண் சென்ற பிறகு, பாக்கெட் டில் பணத்தை வைப்பதுபோல தனது பர்சை அவர் எடுத்துச் சென்று விட்டதை தன்பத் உணர் கிறார். பின்னர், கிரணை சந்தித்து தனது பர்சை தன்பத் திரும்பப் பெறுகிறார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னணியில் இந்திப் பாடல்கள் ஒலிக்கின்றன. இந்தக் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ யூ டியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்துக்குச் சென்றது. இது தொடர்பாக அதிருப்தி அடைந்த உயர் அதி காரிகள் தன்பத்தை எச்சரித்துள் ளனர். சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. ஹவா சிங் கோமாரியா, சீருடையை துஷ்பிரயோகம் செய்யும் காவலர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதி காரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.