இந்தியா

நாடு திரும்பிய பிரதமர் மோடி: அருண் ஜேட்லி குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி
மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, முதல்கட்டமாக மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் வீட்டுக்கு சென்றார்.
சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லிஎய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜேட்லி, சனிக்கிழமை அன்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால் பிரதமர் மோடி அருண் ஜேட்லியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. எனினும் வெளிநாட்டில் இருந்தபடியே அருண் ஜேட்லியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் தெரவித்தார்.

அப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தநிலையில் அவரசமாக நாடு திரும்ப வேண்டாம் என அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் மோடியை கேட்டுக்கொண்டனர்.

இந்தநிலையில், 3 நாள் அரசு முறை பயணத்தை முடித்த பிரதமர் மோடி நாடு திரும்பினார். இதைத்தொடர்ந்து அவர் இன்று காலை மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் வீட்டுக்கு சென்றார்.

அருண் ஜேட்லியின் மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு அவர் ஆறுதல் கூறினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியுடன் உடன் சென்றார்.

SCROLL FOR NEXT