என்.மகேஷ்குமார்
அமராவதி
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அமராவதி தலை நகரை மாற்ற புதிய முதல்வர் ஜெகன்மோகன் திட்டமிடு வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு வலுசேர்க்கும் வகை யில் கர்னூலை சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்பி. டி.ஜி.வெங் கடேஷ் கூறும்போது, “அமராவ தியை தலைநகராக்கும் திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டி கைவிட்டு விட்டார். அதற்கு பதிலாக காக்கி நாடா, விசாகப்பட்டினம், குண்டூர், கடப்பா ஆகிய 4 மாவட்டங்களில் தலைநகரை ஏற்படுத்த தீர்மானித் துள்ளார். இது குறித்து மத்தியில் உள்ள பாஜக தலைவர்களிடம் ஜெகன் பேச்சுவார்த்தை நடத்தியுள் ளார். அந்த தலைவர்கள் இதனை எனக்கு தெரிவித்தனர்” என்றார்.
தலைநகர் மாற்றம் தொடர்பான தகவல் வெளியானதை தொடர்ந்து, தெலுங்குதேசம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இந்நிலையில் எம்.பி. டி.ஜி. வெங்கடேஷின் பேச்சு மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டி.ஜி. வெங்கடேஷ் நேற்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தலைநகர் மாற்றம் குறித்து பாஜ மூத்த நிர்வாகிகளிடம் முதல்வர் ஜெகன் பேசியது உண்மைதான். இதுகுறித்து அவரே விரைவில் தெரிவிப்பார் என நினைக்கிறேன். ஆளும் கட்சியில் ரவுடிகள், குண்டர்கள், பிரிவினைவாதிகள் உள்ளனர். பாஜகவினருக்கு சேவை மனப்பான்மை ரத்தத் திலேயே ஊறியுள்ளது. இரு தெலுங்கு மாநிலங்களிலும் பாஜக கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும்” என்றார்.