இந்தியா

கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 3 துணை முதல்வர்கள் நியமனம்: முதல்வர் எடியூரப்பா அதிருப்தி

செய்திப்பிரிவு

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடகாவில் முந்தைய குமார சாமி ஆட்சியில் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் 17 எம்எல்ஏக் கள் ராஜினாமா செய்தனர். இத னால் அவரது ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 26-ம் தேதி எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.

இவர் தலைமையிலான பாஜக ஆட்சியிலும் அமைச்சர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதால் அமைச்ச ரவை பதவியேற்பு ஒத்தி வைக்கப் பட்டது. கடந்த 19-ம் தேதி 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து நேற்று மாலை அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து, அந்த பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் எடியூரப்பா அனுப்பினார். இதற்கு ஆளுநர் வாஜூபாய்வாலா ஒப்பு தல் அளித்து அமைச்சரவை பட்டியலை வெளியிட்டார். அதன்படி, கோவிந்த் கார்ஜோல் (பொதுப்பணித்துறை), அஸ்வத் நாராயண் (தகவல் தொழில்நுட்பத் துறை), லட்சுமண் சவதி (போக்கு வரத்துத்துறை) ஆகிய 3 பேரும் துணை முதல்வராக நியமிக்கப் பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சராகவும், முன்னாள் துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பாவுக்கு ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துத் துறையும், அசோகா வருவாய்த் துறை அமைச் சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் பசவ ராஜ் பொம்மைக்கு உள்துறையும், சுரேஷ் குமாருக்கு தொடக்கக் கல்வித்துறையும், சோமண்ணா வுக்கு வீட்டு வசதித்துறையும், ராமலுவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையும், சி.டி.ரவிக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முந்தைய எடியூரப்பா ஆட்சி யில் ஈஸ்வரப்பா, அசோகா ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போதைய ஆட்சியில் கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக கோவிந்த் கார்ஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சவதி ஆகிய மூவரும் துணை முதல்வர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இதில் லட்சுமண் சவதி கடந்த சட்டப்பேரவை தேர்த லில் தோல்வி அடைந்தவர். எம்எல்ஏ வாகவோ, எம்எல்சியாகவோ இல் லாத அவரை அமைச்சரவையில் சேர்த்தது ஏன் என்று பாஜகவில் பலரும் கேள்வி எழுப்பினர்.

தற்போது அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட் டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள் ளது. துணை முதல்வராக நியமிக் கப்பட்டுள்ள லட்சுமண் சவதி கடந்த எடியூரப்பா ஆட்சியின் போது, சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததால் அமைச் சர் பதவியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று துணை முதல் வர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத் தால் கட்சிக்குள் கோஷ்டிகள் உருவாகி, ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும், எனவே கட்சி மேலிடம் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என எடியூரப்பா வலியுறுத்த உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

SCROLL FOR NEXT