இந்தியா

பாகிஸ்தான் கழிவுநீரால் சட்லஜ் நதிக்கரை சேதம்

செய்திப்பிரிவு

சண்டிகர்

சட்லஜ் நதி திபெத்தில் உற் பத்தியாகி, இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நுழைகிறது. அங்கிருந்து பஞ்சாப் மாநிலத்தில் நுழையும் இந்த நதி பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக சர்வதேச எல்லையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து மீண்டும் இந்தியாவுக்குள் வந்து பிறகு பசில்கா மாவட்டத்தில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் காசுர் மாவட்டத்துக்குள் பாய்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தானிலும் கனமழை பெய்து வருகிறது. இத னால் கடந்த சனிக்கிழமை இரவு பாகிஸ்தானின் சில மாவட்டங்களில் இருந்து திடீரென திறந்துவிடப்பட்ட தண்ணீர் சட்லஜ் நதியில் கலந்ததால் வெள்ளம் கரைபுரண்டது. இதன் காரணமாக, பஞ்சாபின் பெரோஸ் பூர் மாவட்டத்தில் உள்ள தெண்டி வாலா உட்பட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதுகுறித்து தகவலறிந்த ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பெரோஸ்பூர் துணை ஆணையர் சந்தர் கைந்த் கூறும்போது, “சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தானின் காந்த சிங் வாலா கிராமத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றி லிருந்து வெளியேறும் கழிவுநீரை மழை நீருடன் கால்வாய் மூலம் சட்லஜ் நதியில் திடீரென திறந்து விட்டுள்ளனர். அந்தப் பகுதியி லிருந்து சட்லஜ் நதி மீண்டும் இந்தியாவுக்குள் (தெண்டிவாலா) நுழைவதால் அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைப் பகுதி சேதமடைந்துள்ளது. இத னால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து, கரையை பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாநில நீர்வளத் துறைக்கு முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

கழிவு நீர் கலந்ததன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படும் என்ற அச்சம் நிலவு கிறது. இதையடுத்து, சுகாதாரப் பணியாளர்கள் அங்கு முகாமிட்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலை யில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வெள்ளம் காரணமாக ரூ.1,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்ட நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது. இதனிடையே, வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்பி வைக்க மத்திய உள்துறை திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT