புதுடெல்லி
மனோகர் பரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி என அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் மரணடைந்தது ஏன் என அக்கட்சி எம்.பி. பிரக்யா சிங் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லிஎய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பிற்பகல் 12.07 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது. அவரது இறுதிச்சடங்குகள் நேற்று நடந்தன.
முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர்களான மனோகர் பரிக்கரும், சுஷ்மா ஸ்வராஜூம் உடல்நலக்குறைவால் சமீபத்தில் காலமானார்கள். இந்தநிலையில் அருண் ஜேட்லிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக போபால் எம்.பி. பிரக்யா சிங் தாகூர் கூறியதாவது:
தேர்தல் சமயத்தில் மகாராஜ் ஜி என்னிடம், இது மிகவும் மோசமான நேரம். பாஜகவுக்கு எதிராகவும், உங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகின்றன. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்தார். நான் அதன் பிறகு அதை மறந்து விட்டேன்.
இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறி உண்மை என்றே தோன்றுகிறது. பாஜக மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர்’’ எனக் கூறினார்.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்