புதுடெல்லி
ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்திருப்பதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள் ளன. இரு அமைப்புகளும் தனித் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தள்ளு படி செய்தது. அதற்கு அடுத்த நாளில் அவர் கைது செய்யப்பட் டார். அவரை 26-ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுக் களை தள்ளுபடி செய்ததை எதிர்த்து ப. சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக் களை நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வு கடந்த 23-ம் தேதி விசாரித்தது.
அப்போது வரும் 26-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்ய உச்ச நீதி மன்றம் தடை விதித்தது. ஆனால் சிபிஐ வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் தனக்கு எதிராக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் டெல்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகிறது.
சிபிஐ காவல் முடிந்து ப.சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட உள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைக்காவிட்டால் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்