இந்தியா

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி : பியர் கிரில்ஸ் இந்தியை புரிந்து கொண்டது எப்படி?- பிரதமர் மோடி விளக்கம்

செய்திப்பிரிவு


புதுடெல்லி

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் தான் பேசிய இந்தியை பியர் கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்கு பாதுகாப்பை மையக் கருத்தாக கொண்டு, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி, கடந்த 12-ம் தேதி ஒளிபரப்பானது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறார். அதன் ஒருபகுதியாகத்தான் இந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சி டிஸ்கவரி சேனல் வழியாக 180 நாடுகளில் ஒளிபரப்பானது.
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மாடி இதுபற்றியும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில் ‘‘வனப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், நான் ஹிந்தி பேசியதை, பியர் கிரில்ஸ் எப்படி புரிந்து கொண்டார் என ஏராளமானோர் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் இந்த நிகழ்ச்சி எடிட் செய்யப்பட்டதா அல்லது பலமுறை காட்சிபடுத்தப்பட்டதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர். எனக்கும், அவருக்கும் இடையில், தொழில்நுட்பம் பெரிய பாலமாக செயல்பட்டது. எனது ஹிந்தி மொழியை மொழிபெயர்க்கும் கருவியை அவர் அணிந்து கொண்டார்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT