செகந்திராபாத் ரயில்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மறு சுழற்சி செய்யும் இயந்திரம் 
இந்தியா

ரயில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் ரயில், ரயில் நிலையங்களில் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கெனவே தடை அமலில் உள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு பிரதமர் மோடி அண்மையில் தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

இந்தநிலையில் நாடுமுழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என ரயில் கடந்த திங்களன்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்யும் இயந்திரங்களை 360 ரயில் நிலையில்களில் நிறுவன ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி முதல்கட்டமாக 1853 இயந்திரங்கள் நிறுவப்படும் என தெரிகிறது.

இதுதொடர்பாக ரயில் மண்டல மேலாளர்கள், நிர்வாகிகளுக்கு ரயில்வே சுற்றிக்கை அனுப்பியுள்ளது. இதுபோலவே ரயில்வே ஊழியர்கள் ‘கேரி பேக்கு’கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT