திருவனந்தபுரம்
கேரள கன்னியாஸ்திரி லூசி சிறை வைக்கப்பட்ட விவகாரம் தொடர் பாக அந்த மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ சபையை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பேராயர் பிராங்கோ மூலக்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னி யாஸ்திரி கடந்த ஆண்டு ஜூனில் புகார் செய்தார். ஆனால் போலீ ஸார் புகாரை ஏற்கவில்லை.
இதை கண்டித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியும் அவருக்கு ஆதரவாக 4 கன்னியாஸ்திரிகளும் உயர் நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு செப்டம்பரில் பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்தனர். அவரது பேரா யர் பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிராங்கோ மூலக்கல் ஜாமீனில் வெளியே உள்ளார்.
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போராடிய 4 கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூசி தற்போது வயநாட்டின் வெள்ளமுண்டாவில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் கான்வென்டில் தங்கியுள்ளார். அவர் கார் வாங்கியிருப்பதாகவும் கவிதை தொகுப்பை வெளியிட்ட தாகவும் குற்றம்சாட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ சபை அவரை, கான்வென்டில் இருந்து அண்மை யில் நீக்கியது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை தேவாலய ஆராதனையில் லூசி பங்கேற்பதை தடுக்க சிலர் கான்வென்ட் கதவை வெளிப்புற மாக பூட்டி சிறை வைத்தனர். இதுதொடர்பாக அவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. வெள்ள முண்டா போலீஸார் விரைந்து சென்று லூசியை மீட்டனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சந் தோஷ் நேற்று கூறும்போது, "கன்னி யாஸ்திரி லூசி சிறை வைக்கப்பட் டது தொடர்பாக வழக்கு பதிவு செய் யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
கன்னியாஸ்திரி லூசி நேற்று கூறியதாவது: கான்வென்ட் வளா கத்தில் நான் சிறை வைக்கப்பட்ட போது போலீஸாரும் நிருபர்களும் வந்து என்னை மீட்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தொகுத்து என்னை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பாதிரியார் ஒருவரே அவதூறாக பேசி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.