மும்பை
அசாமில் அண்மையில் கொட் டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்தனர். பெருமள வில் பயிர்கள் நாசம் அடைந்தன. சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சேதம் அடைந்தன.
இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரண நிதியாக நடிகர் அக்ஷய் குமார் ரூ.2 கோடி வழங்கியுள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும் காசிரங்கா பூங்கா சீரமைப்பு பணிக்கு ரூ.1 கோடியும் அவர் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அக் ஷய் குமார் கூறும்போது, “நமது நாட்டை அற்புத நாடாக கருதுகிறேன். ஓரிடத்தில் மக்களுக்கு பிரச்சினை என்றால் நீங்கள் ஏதேனும் ஒரு உதவியை தொடங்கி வைத்தால் போதும். நீர்க்குமிழி போல அது பல்கிப் பெருகும். தாராள மனம் கொண்டவர்களின் நாடு இந்தியா. உந்துகோலாக நாம் சற்று தள்ளி னால் போதும். உதவிகள் பெருகும். தாய் ஒருவர் தனது குழந்தையை தோளில் சுமந்துகொண்டு வெள் ளத்தை கடந்து வரும் புகைப்படம் ஒன்றை கண்டேன். அவரது முகத் தில் துளியும் வருத்தம் இல்லை. தனது அனைத்து கவலைகளையும் அவர் மறந்துவிட்டார். இதுபோன்ற புகைப்படங்களை பார்க்கும் போது, இத்தகைய சூழ்நிலை நாளை எனது மனைவிக்கோ அல் லது மகளுக்கோ ஏற்படலாம் என கருதினேன். எனவேதான் நிதி யுதவி செய்தேன். இதுபோல் வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட காண்டா மிருகம் போன்ற விலங்குகளின் படங்கள் என்னை பாதித்தது. கட வுள் எனக்கு நிறைய பணம் கொடுத்துள்ளார். எனவே ஒரு முறைக்கு மேல் யோசிக்காமல் இத்தொகையை கொடுத்தேன்” என்றார்.