காசி விஸ்வநாதர் ஆலயத்தில் லிங்க வடிவில் உள்ள விஸ்வநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. 
இந்தியா

காசி விஸ்வநாதர் கோயிலில் கட்டுப்பாடு; பக்தர்கள் மூன்று அடி தூரத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

காசி விஸ்வநாத சுவாமியை இனி பக்தர்கள் மூன்று அடி தூரத்தில் நின்றுதான் தரிசிக்க முடியும். இந்தப் புதிய நடைமுறையால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் விஸ்வநாதரை தொட்டு வணங்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் காசி எனும் வாரணாசியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற விஸ்வநாதர் கோயில். இங்கு தரிசனம் செய்ய வரும் பொது மக்கள் அதன் கருவறை வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதில், பக்தர்கள் கருவறையில் உள்ள சிவலிங்கத்தை மனம் குளிர தொட்டு வணங்கியதுடன், லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்டவற்றையும் நேரடி யாகத் கைகளில் எடுத்து தங்கள் தலை மீது தெளித்துக் கொள்வதும் வழக்கமாக இருந்தது.

ஆனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியை மூன்று அடி தூரத்தில் தள்ளி நின்று தரிசிக்க வேண்டும். இதற்காக, கருவறையை சுற்றி தடுப்புக்கம்பிகளும் போடப்பட்டு விட்டன. எனினும், அபிஷேக நீர் மற்றும் பூக்கள் பொதுமக்களுக் காக அவர்கள் நின்ற இடத்திலேயே கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து விஸ்வநாதர் கோயிலின் தலைமை நிர்வாகி யான விஷால் சிங் கூறும்போது, ‘‘வழக்கமாக ஸ்ரவண மாதங் களில் வரும் கூட்ட நெரிசலை சமாளிக்க இதுபோன்ற ஏற் பாட்டை செய்து வந்தோம். இனி அந்தமுறை வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படும். இந்த மாற்றம் சில பாதுகாப்பு காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

பிரமுகர்களுக்கு சலுகை

எனினும், அதிமுக்கிய பிரமுகர் களுக்கு மட்டும் வழக்கம்போல் கருவறையினுள் அமர்ந்து பூஜை செய்து தரிசிக்கும் அனுமதி தொடரும் எனவும் கூறப்படுகிறது. இந்துக்களின் புனித தலமாக விளங்கும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அந்நகரில் வசிப்பவர் கள் அன்றாடம் காலையிலும், மாலையிலும் சுமார் 5,000 பேர் தரிசிக்க வருவது வழக்கம். இவர்கள் தவிர நாடு முழுவதி லும் இருந்து தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் அக்கோயி லுக்கு வந்து செல்கின்றனர். இந்த புதிய முறை தரிசனத்துடன் கோயிலில் மேலும் பல இடங்களுக்கும் கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT