இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
கர்நாடகாவில் முன்பு குமாரசாமி தலைமையிலான ஆட்சியில் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக் காததால் 15 எம்எல்ஏக்கள் ராஜி னாமா செய்தனர். இதனால் குமார சாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த ஜூலை 23 -ம் தேதி கவிழ்ந்தது. இதை யடுத்து, புதிய முதல்வராக எடியூரப்பா ஜூலை 26 -ல் பதவி யேற்றார்.
முதல்வராக பொறுப்பேற்று 20 நாட்களுக்கு மேலாகியும் அமைச் சர்கள் நியமிக்கப்படாததால் காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதே வேளையில் பாஜக மூத்த தலைவர்களும், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அதிருப்தி எம்எல்ஏக் களும் அமைச்சரவையில் இடம் பிடிக்க ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கலந்துரையாடினார்.
அப்போது யார் யாருக்கு அமைச் சரவையில் இடம் அளிப்பது, மூத்த தலைவர்களுக்கு எந்த துறையை ஒதுக்குவது, சாதி வாரியாக எத் தனை பேருக்கு வாய்ப்பு அளிப்பது, மாகாண வாரியாக யாருக்கு இட மளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்கட்டமாக 25 பேரின் பெயர் கள் அடங்கிய பட்டியலையும் எடியூரப்பா பாஜக மேலிடத்தில் வழங்கினார்.
இதனை பரிசீலித்த அமித் ஷா முதல்கட்டமாக 15 முதல் 17 பேர் அடங்கிய அமைச்சரவை விரிவாக் கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அந்த பெயர் பட்டியலை பெங்க ளூருவில் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பா அறிவிக்க இருக்கிறார். அதன் பிறகு மாலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழா வில் ஆளுநர் வாஜூபாய் வாலா தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக் களுக்கு அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதுகுறித்து எடியூரப்பா கூறுகை யில், ‘‘செவ்வாய்க்கிழமை அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகை கவனித்து வருகிறது. அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையிலே அமைச்சரவை பதவி யேற்பு இருக்கும். 33 அமைச் சர்களும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவில்லை’’ என்றார்.
குமாரசாமி தலைமையிலான ஆட்சி அமைச்சரவை விரிவாக் கத்தில் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே கவிழ்ந்தது. எனவே அமைச்சரவை விரிவாக்கத்தில் எவ்வித அதிருப்தியும் ஏற்படாத வகையில் அமைச்சர் பதவி வழங்க எடியூரப்பா திட்டமிட் டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ், மஜத அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங் கும் வகையில் அமைச்சரவையில் சில இடங்களை காலியாக வைக் கவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.