புதுடெல்லி
கடந்த 16-வது மக்களவையை சேர்ந்த சுமார் 200 முன்னாள் எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள அரசு வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கடந்த மே 25-ம் தேதி 16-வது மக்களவை கலைக் கப்பட்டது. அரசு விதிகளின்படி ஜூன் 25-க்குள் முன்னாள் எம்.பி.க் கள் வீடுகளை காலி செய்திருக்க வேண்டும். அவர்கள் வெளியே றாமல் இருப்பதால் புதிய எம்.பி.க் களுக்கு வீடு ஒதுக்குவதில் சிரமம் ஏற்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி வீட்டு வசதி கமிட்டி யின் தலைவர் சிஆர். பாட்டீல் கூறியபோது, “முன்னாள் எம்.பி.க் கள் ஒரு வாரத்துக்குள் அரசு வீடுகளை காலி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.