பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

காற்று மாசுபடிதலை அதிகரிக்கும்  சல்ஃபர் டையாக்சைடை வளிமண்டலத்துக்கு அதிகம் அனுப்பும் நாடு இந்தியா

செய்திப்பிரிவு

புதுடெல்லி, பிடிஐ

காற்று மாசடைதலுக்கும் சுற்றுச்சூழலை நாசம் செய்வதுமான சல்ஃபர் டையாக்ஸைடை அளவுக்கதிகமாக வளிமண்டலத்துக்கு அனுப்பும் முதன்மை நாடு இந்தியா என்று நாசா ஆய்வைச் சுட்டிக்காட்டி கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் தரவு வெளியிட்டுள்ளது.

நிலக்கரியை எரிப்பதால் சல்பர் டையாக்சைடு அதிகம் வெளியாகி வளிமண்டலத்துக்குச் செல்கிறது. மானுட உற்பத்தி நடவடிக்கைகளினால் வளிமண்டலத்துக்குச் செல்லும் சல்ஃபர் டையாக்சைடில் 15% இந்திய தொழில்துறையிடமிருந்து செல்வதுதான். ஒசோன் கண்காணிப்பு செயற்கைக் கோள் இதனைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் சல்பர் டையாக்சைடு வெளியாகும் இடங்களில் மத்திய பிரதேசம் சிங்ரவுலி, தமிழகத்தின் நெய்வேலி மற்றும் சென்னை, ஒடிசாவின் தால்சர் மற்றும் ஜார்சுகுடா, சத்திஸ்கர் மாநிலத்தின் கோர்பா, குஜராத் மாநிலம் கட்ச், தெலங்கானாவின் ராமகுண்டம், மகாராஷ்டிராவின் சந்த்ரபூர் மற்றும் கொரடி ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

மேலும், இந்தியாவில் பெரும்பாலான தாவரங்களுக்கான சல்பர் நீக்க தொழில்நுட்பம் இல்லாமல் போனதும் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதனால் காற்றில் மாசுபடிவதை தடுக்க முடியவில்லை.

நாசா தரவுகளின் படி ரஷ்யாவின் நாரில்ஸ்க் உருக்கு வளாகம் உலகிலேயே அதிக சல்பர் வெளியீட்டு தொழிற்துறையாகும்.

ஆனாலும் அதிக இடங்களில் சல்பர் டையாக்சைடு வெளியாகும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம். அனல் மின் நிலையங்கள் மீது நடவடிக்கை தேவை என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் நாட்டில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் சாடுகின்றனர்.

காற்றில் மாசுபடிந்திருப்பதால் ஏற்படும் ஆரோக்கியக் கோளாறுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 42 லட்சம் மக்கள் பலியாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT