புதுடெல்லி
லடாக் பகுதிக்கு காங்கிரஸ் ஆட்சி முக்கியத்துவம் தரவில்லை என்றும் காங்கிரசின் அலட்சியத்தால் லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்தது என்றும் லடாக் பகுதி பாஜக எம்.பி. ஜாம்யங் செரிங் நம்கியால் குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இது தொடர்பாக மக்களவையில் நடந்த விவாதத்தின்போது அரசின் முடிவை ஆதரித்தும் லடாக் பகுதி புறக்கணிக்கப்பட்டதாகவும் அப்பகுதியின் பாஜக எம்.பி. ஜாம்யங் செரிங் நம்கியால் எதிர்க் கட்சிகளுக்கு பதிலடி கொடுத்தார். அவரது பேச்சு நாடு முழுவதும் கவனம் பெற்றது.
இந்நிலையில், டெல்லியில் பிடிஐ நிறுவனத்துக்கு ஜாம்யங் செரிங் நம்கியால் அளித்த பேட்டியில் கூறியதாவது:
லடாக் பகுதி யூனியன் பிரதேச மாக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறி உள்ளது. லடாக் மக்களின் விருப் பத்துக்கு மாறாக காஷ்மீருடன் லடாக் இணைக்கப்பட்டது. லடாக் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டது. காஷ்மீரில் மோதல் போக்கு நிலவியபோதெல்லாம் கடும் நடவடிக்கை எடுக்காமல் தீவிரவாதிகளை சமாதானப்படுத் தும் அணுகுமுறையை காங்கிரஸ் மேற்கொண்டது. இதனால், லடாக் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சீனா எல்லையை ஒட்டிய இந்திய பகுதிகளை சீனா ஆக்கிர மித்தது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அங்குலம் அங்குலமாக சீனாவை நோக்கி முன்னேறுவோம் என்று அறிவித் தார். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்தது. சீனா நம்மை நோக்கி தொடர்ந்து முன்னேறியது. டெம்சாக் பகுதி வரை சீனா ஊடுருவியது. காங்கிரசின் அலட் சியத்தால் லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமித்தது. இப்போது யூனியன் பிரதேசமாக ஆகியிருப் பதன் மூலம் லடாக் பகுதி பாது காப்பும் வளர்ச்சியும் பெறும்.
இவ்வாறு ஜாம்யங் செரிங் நம்கியால் கூறினார்.