இந்தியா

தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம்

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

‘தூய்மை இந்தியா’ திட்டம் துவங்கி வரும் அக்டோபர் 2-ம் தேதியன்று ஐந்து வருடம் நிறை வடைய உள்ளது. இதையொட்டி அத்திட்டத்தை வெற்றியடைய வைத்த 10 லட்சம் பேருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி 12 இந்திய மொழிகளில் இமெயிலில் கடிதம் அனுப்ப உள்ளார்.

பிரதமர் மோடி 2014-ல் பதவி ஏற்று டெல்லி செங்கோட்டையில் முதலாவதாக ஆற்றிய சுதந்திரதின உரையில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்தார். பிறகு, இத்திட்டத்தை காந்தியின் நினை வாக அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி டெல்லியின் மந்திர் மார்க் பகுதியில் துவக்கி வைத்தார். அப்போது நாட்டின் சுமார் 38 சதவிகிதப் பகுதி மட்டும் தூய்மை செய்யப்பட்டு வந்ததாக மத்திய அரசின் ஒரு புள்ளி விவரம் கூறியது.

அதே புள்ளி விவரப்படி தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியால் சுமார் 99 சதவிகிதப் பகுதி தூய்மை பெற்று வருவதாகக் கருதப்படுகிறது. இத்துடன் திறந்தவெளி கழிப்பறை களும் பெரும்பாலுமாக முடிவிற்கு வந்துள்ளது. எனவே, இந்த திட்டத் துக்கு ஆதரவளித்த நிறுவனங்கள், பொது அமைப்புகள், சமூக சேவகர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் பத்து லட்சம் பேருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இமெயில் மூலம் கடிதம் எழுத உள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிரதமர் அலுவலக வட்டாரம் கூறும்போது, ‘‘இந்த செயல் தூய்மை இந்தியா திட் டத்தை அங்கீகரிக்கும் விதத்திலும், அதன் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் அமையும். இந்தியா வின் 12 முக்கிய மொழிகளில் இக்கடிதங்கள் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மூலமாக வரும் அக்டோபர் 2-ல் பிரதமரால் அனுப் பப்பட உள்ளது’’ எனத் தெரிவித்த னர்.

தூய்மை இந்தியா திட்டம் என்பது உலக நாடுகளில் அமலான பொதுமக்கள் நடவடிக்கைகளில் மிகப்பெரியதாகக் கருதப்படுகி றது. இதற்கு அத்திட்டத்தில் அதிக அளவிலான எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்து கொண்டது காரணம். இத்திட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நாட்டின் முக்கியப் பிரபலங்களான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நட்சத்திரங்களான அக்க்ஷய்குமார், அனுஷ்கா சர்மா, பெருநிறுவனத் தொழில் அதிபரான முகேஷ் அம் பானியின் மனைவி நீத்தா அம்பானி உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் பங்கெடுத்து பிரச்சாரம் செய்தனர். இவர்களை போல் பல்வேறு பிரிவினருக்கும் பிரதமர் மோடி கடந்த 2017-ல் நேரிடையாகக் கடிதம் எழுதியும் கோரி இருந்தார். இந்த திட்டம் வெற்றி அடைந் ததை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதவிருக்கும் கடிதம் தமிழ், உருது, இந்தி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி மற்றும் கன்ன டம் உள்ளிட்ட 12 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் பிரதமர் மோடி செங் கோட்டையில் ஆற்றிய சுதந்திரதின உரையில் மக்கள்தொகை பெருகி வருவதை குறிப்பிட்டு கவலை தெரிவித்திருந்தார். தூய்மை இந்தியாவை போல் மக்கள்தொகையையும் கட்டுப் படுத்த அவர் விரைவில் பொது மக்கள் இடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கவும் முடிவு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT