ஆகாஷ் முகர்ஜி 
இந்தியா

அதிவேகமாக கார் ஓட்டி விபத்து: மேற்கு வங்க பாஜக எம்.பி. ரூபா கங்குலியின் மகன் கைது

செய்திப்பிரிவு

கொல்கத்தா

காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தாக கூறி நடிகையும், பாஜக எம்.பியு மான ரூபா கங்குலியின் மகனை கொல்கத்தா போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தாவை சேர்ந்தவர் நடிகை ரூபா கங்குலி. இவர் தற்போது பாஜக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது மக னான ஆகாஷ் முகர்ஜி (21), அப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது, கட்டுப் பாட்டை இழந்த அவரது கார், அங்குள்ள கோல்ஃப் கிளப் கட்டிட சுற்றுச்சுவரில் மோதியது. இதில், அந்த சுவர் இடிந்து விழுந்தது.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அந்த காரை சுற்றி வளைத்தனர். இதன் தொடர்ச்சி யாக, ஆகாஷ் முகர்ஜியின் தந்தை அங்கு வந்து, உடனடியாக அவரை காரில் இருந்து வெளியே கொண்டு வந்தார். இந்த விபத்தில் ஆகாஷ் முகர்ஜி உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்து குறித்து தகவலறிந்த கொல்கத்தா போலீஸார், ஆகாஷ் முகர்ஜியை கைது செய்துள்ளனர். மது அருந்திவிட்டு அவர் வாகனம் ஓட்டினாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ரூபா கங்குலி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

எனது வீட்டின் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்தேன். இந்த விஷயத்தில் எந்த அரசியலும், பாரபட்சமும் இருக்காது. சட்டம் தனது கடமையை செய்யும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT