புதுடெல்லி
அநீதி, சகிப்பின்மைக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத் தில் சோனியா காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கானோர் தங்கள் இன் னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதனை மனதில் வைத்து, சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்.
இந்தியா தற்போது அனைத்து நிலைகளிலும் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. ஆனால் உண்மை, அமைதி, மனிதநேயம், நாட்டுப் பற்று உள்ளிட்ட முக்கிய மான விஷயங்கள் பின்தங்கி விட்டன.
வெறுப்புணர்வு, அடிப்படை வாதம், இனப் பாகுபாடு, சகிப் பின்மை, அநீதி ஆகியவற்றுக்கு சுதந்திர இந்தியாவில் இடமில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் அதேசமயத்தில், இவற் றுக்கு எதிராகவும் மக்கள் குரலெ ழுப்ப வேண்டும். இவ்வாறு சோனியா தெரிவித்தார். - பிடிஐ