புதுடெல்லி
முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமிக்கப்படுவார் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
கார்கில் போரின்போது ராணுவ தலைமை தளபதியாக பணியாற் றிய ஜெனரல் பி.வி. மாலிக் கூறும்போது, “முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமிக்கப்படுவார் என்ற பிரதமரின் அறிவிப்பு வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீர வணக்கம் செலுத்துகிறேன். இதன்மூலம் நமது நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்படும். செலவுகள் குறையும். முப்படைகள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) சுனில் லம்பா கூறும்போது, “முப்படைகளும் ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற யோசனை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அந்த கனவுத் திட்டம் இப்போது நிறைவேறியுள்ளது. இதன்மூலம் பாதுகாப்புப் படைகள் தொடர்பான திட்டங்களை சிறப் பாக செயல்படுத்த முடியும். முப் படைகள் இடையே ஒருங் கிணைப்பு அதிகரிக்கும். பட்ஜெட் செலவு குறையும்” என்றார்.
ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) மன்மோகன் பகதூர் கூறும் போது, “பிரதமரின் அறிவிப்பு வர வேற்கத்தக்கது. இந்த திட்டத்தை நேர்த்தியாக செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
லெப்டினென்ட் ஜெனரல் சயீது அடா ஹுசைன் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு தெளிவான பாதையைக் காட்டுகிறது. புதிய தலைமைத் தளபதியால் மத்திய அரசுக்கு சிறந்த அறிவுரை, ஆலோசனைகளை வழங்க முடியும்” என்றார்.
கடந்த 1999 கார்கில் போரின் போதே முப்படைகளுக்கும் ஒரே தலைமை இருக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்த நரேஷ் சந்திரா குழு கடந்த 2012-ம் ஆண்டில் மத்திய அரசிடம் தனது அறிக் கையை சமர்ப்பித்தது. அதில், முப்படைகளுக்கும் ஒரே தலைமை அவசியம் என்று பரிந்துரை செய் யப்பட்டது. அந்தப் பரிந்துரையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.