புதுடெல்லி
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுடன்(டிஎம்சி) கூட்டணி வைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மக்களவையின் டிஎம்சி தலைமை கொறடாவான கல்யாண் பானர் ஜியும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் சந்தித்துப் பேசினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடை பெற்ற இந்த சந்திப்பு நல்ல முறையில் இருந்ததாகக் கூறப் படுகிறது. அப்போது, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், தங்களுக்கு பொது எதிரியாக உள்ள பாஜகவை தோற்கடிக்க, கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான அகமது படேல் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் டிஎம்சி மூத்த தலைவர்களுடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதில், ஏற்படும் உடன்பாட்டை பொறுத்து ராகுல் காந்தி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இறுதிகட்டமாக டிஎம்சி தலைவர் மம்தா பானர்ஜியும் காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
காங்கிரஸில் இருந்து பிரிந் ததுதான் டிஎம்சி. இவ்விரு கட்சி களும் 2009 மக்களவைத் தேர்தலின்போது முதன் முறையாகக் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
பாஜகவின் வளர்ச்சி
பிறகு 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. 2013-ல் பிரிந்த இவ்விரு கட்சிகளும், 2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டன. அப்போது பாஜகவுக்கு 2 தொகுதிகள் மட்டும் கிடைத்தன. ஆனால் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து, 2019 மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 42-ல் பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2014-ல் 34 இடங்களில் வென்ற டிஎம்சி, 2019-ல் 22-ல் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 2-ல் வெற்றி பெற்றது. இடதுசாரிகளால் ஒரு இடத் தில்கூட வெற்றி பெற முடிய வில்லை.
2019 மக்களவைத் தேர்தலில் டிஎம்சி 43.3 சதவீத வாக்குகளுடன் முதல் இடத்தை தக்கவைத்தது. பாஜக 40.3 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடம் பிடித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6.3 சதவீதமும் காங்கி ரஸுக்கு 5.6 சதவீதமும் வாக்கு கள் கிடைத்தன. இதனால், மேற்கு வங்க மாநிலத்தில் 2021-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை என்ற நிலை உள்ளது. இதைத் தடுக்கவே, காங்கிரஸுக்கும் டிஎம்சிக்கும் கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.